ஈரோடு சக்திமசாலா நிறுவனம் மற்றும் சக்திதேவி அறக்கட்டளையின் சார்பில், 18 வயதுமுதல் 44 வயதினருக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. 
Regional02

சக்திமசாலா நிறுவனம் சார்பில் - கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் :

செய்திப்பிரிவு

ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் சார்பில் 18 முதல் 44 வயதினருக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் தனது நிறுவனம் மற்றும் சக்திதேவி அறக்கட்டளையின் மூலம் பல்வேறு சமுதாயப்பணிகளை செய்து வருகிறது. தன்னிடம் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனிலும் தனிக்கவனம் செலுத்தும் சக்தி மசாலா நிறுவனம், அரசு உத்தரவின்படி, 18 வயது முதல் 44 வயதினருக்கான முதல் தவணை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை சக்திதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடத்தியது.

சக்தி மசாலா நிறுவனர் பி.சி.துரைசாமி, இயக்குநர் சாந்தி துரைசாமி மற்றும் ஜம்பை வட்டார மருத்துவஅலுவலர் தனலட்சுமி தலைமையில் நடந்த இந்த முகாமில் 434 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மருத்துவ அலுவலர்கள் கோகுலகிருஷ்ணன், பிரியங்கா மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சக்திதேவி அறக்கட்டளையின் பணியாளர்கள் முகாமில் பங்கேற்றனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை சாந்தி துரைசாமி, செந்தில்குமார், தீபா செந்தில்குமார் வேணுகோபால் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT