Regional02

நிதி வழங்கிய சிறுவனுக்கு சைக்கிள் :

செய்திப்பிரிவு

மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது ஆரிப் என்ற சிறுவன், சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் பணம் சேர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கரோனா தொற்றை கட்டுப்படுத்த முதல்வரின் நிவாரண நிதிக்கு முகமது ஆரிப், தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த 2,617 ரூபாயை பாளையங்கோட்டை தொகுதி எம்எல்ஏ அப்துல் வகாப் மூலம் வழங்கினார்.

சிறுவனின் ஆர்வத்தை பாராட்டி கேடிசி நகர் ஏடிஆர் சைக்கிள் மார்ட் உரிமையாளர் ஆரோக்கியராஜ் மற்றும் தபால் ஊழியர் ராம்குமார் ஆகியோர் புதிய சைக்கிளை அப்துல் வகாப் எம்எல்ஏ மூலம் பரிசளித்து பாராட்டினர்.

SCROLL FOR NEXT