Regional02

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று - கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (மே 31) காய்ச்சல் பரிசோதனை முகாம், மாதிரி சேகரிப்பு மற்றும் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம்:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை பாத்திமா நகர், தருவை சாலை, கணேஷ் நகர், திரேஸ்புரம், தபால் தந்தி காலனி, முள்ளக்காடு ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மேல சண்முகபுரம் ரீனோ மஹால், பாத்திமா நகர் பாத்திமா மாதா சர்ச், டூவிபுரம் பூங்கா, இன்டேன் காஸ் கம்பெனி, திருச்செந்தூர் பிரதான சாலை சத்யா நகர் எதிரில், சத்திரம் தெரு அறிஞர் அண்ணா கல்யாண மண்டபம், மீளவிட்டான் அங்கன்வாடி மையம், சிப்காட், முத்தையாபுரம் எஸ்.கே.சங்கரன் மஹால் ஆகிய பகுதிகளிலும் முகாம் நடைபெறும். காயல்பட்டினம் நகராட்சியில் காலையில் வீரபாண்டியன் பட்டினம் பேருந்து பணிமனை, குறிஞ்சி நகர்பகுதிகளிலும், மாலையில் பிரசாத் நகர் பகுதியிலும் முகாம் நடைபெறும்.

ஊராட்சி பகுதிகளில் காலையில் ராமச்சந்திரபுரம், குலையன்கரிசல், காசிலிங்கபுரம், விளாத்திகுளம், முறப்பநாடு, பக்கபட்டி, ஆறுமுகமங்கலம், ஆலடியூர், சண்முகபுரம், கரையடியூர், கலங்கடியூர், குலக்கரையடியூர், சுல்தான்புரம், பரமன்குறிச்சி வடக்கு தெரு, வெள்ளாளன்விளை, ஆறுமுகநேரி பேரூராட்சி காலனி, ஜெயின்நகர், கருவேலம்பாடு, வில்லம்புதூர், கண்டுகொண்டான் மாணிக்கம், தெற்கு ராமசாமிபுரம், வடக்கு ராமசாமிபுரம், பொத்தான்காலன் விளை, சோனியாகாந்தி நகர், ஈராச்சி ஊராட்சி - கசவன்குன்று (சமுதாய நலக் கூடம்), இளம்புவனம் ஊராட்சி - இளம்புவனம் (சமுதாய நலக் கூடம்), இளம்புவனம் ஊராட்சி - மாதாபுரம் (அங்கன்வாடி மையம்), காளாம்பட்டி, நாச்சியார்பட்டி, காலாங்கரைப்பட்டி, சிவஞானபு ரம் ஊராட்சி - சிவஞானபுரம், நமச்சிவாயபுரம் ஊராட்சி - நமச்சிவாயபுரம், சக்கம்மாள்புரம் ஊராட்சி - சக்கம்மாள்புரம், ஆதனூர், சந்திரகிரி, எப்போதும் வென்றான் ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும்.

மாலையில் தெற்கு சிலுக்கன்பட்டி, கோனார்குளம், வசவப்பபுரம், மாரமங்கலம் கீழூர், மாரமங்கலம், தீப்பாச்சி, வைத்திலிங்கபுரம், எள்ளுவிலை, புதூர், குரங்கனி, மஞ்சள்விளை, தொட்டியன் குடியிருப்பு, சவுக்கியபுரம், ஈராச்சி ஊராட்சி - பாப்புநாயக்கன்பட்டி (சமுதாய நலக்கூடம்), இளம்புவனம் ஊராட்சி - குமாரகிரி (ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி), இளம்புவனம் ஊராட்சி - பிதப்புரம், சோத்துநாயக்கன்பட்டி (ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி), அ.பாலகிருஷ்ணபுரம், அழகப்பபுரம், கெச்சிலாபுரம், சிவஞானபுரம் ஊராட்சி - லட்சுமிபுரம், நமச்சிவாயபுரம் ஊராட்சி - கே.துரைச்சாமிபுரம், சக்கம்மாள்புரம் ஊராட்சி - பொம்மையாபுரம், மிளகுநத்தம், கீழச்செய்தலை, கழுகாசலபுரம் ஆகிய பகுதிகளிலும் முகாம் நடைபெற உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT