Regional02

தூத்துக்குடியை ஏற்றுமதி மையமாக மாற்ற நடவடிக்கை : சிறுதொழில் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. உறுதி

செய்திப்பிரிவு

தூத்துக்குடியை ஏற்றுமதி மைய மாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்து வது குறித்து, தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில் சங்கம் (துடிசியா) சார்பில் இணையவழி ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. கனிமொழி எம்.பி. தலைமை வகித்தார். தமிழக சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் முன்னிலை வகித்தார். துடிசியா தலைவர் நேரு பிரகாஷ், செய லாளர் ராஜசெல்வின் உள்ளிட்ட துடிசியா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

“தொழில் தொடங்குவதற்கான அனுமதிகளை எளிதாக பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். தூத்துக்குடி- மதுரை தொழில்வழித்தடம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தூத்துக் குடிக்கு கனரக தொழிற்சாலைகள் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல் வழி, வான் வழி, ரயில் வழி, சாலை வழி என, நான்கு வழி போக்குவரத்து வசதிகளை கொண்ட தூத்துக்குடிக்கு பல தொழில் நிறுவனங்களை கொண்டு வர வேண்டும். இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என துடிசியா தலைவர் வலியுறுத் தினார். கனிமொழி எம்.பி. பேசும்போது, “ தூத்துக்குடியை ஏற்றுமதி மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். உணவு பூங்கா கொண்டுவர முயற்சி எடுக்கப்படும். தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இஎஸ்ஐ மருத்துவமனை பிரச்சினை தீர்க்கப்படும்” என்றார்.

கோவில்பட்டி

SCROLL FOR NEXT