கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறி வித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டா லினுக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரு மான அன்பில் மகேஸ் பொய்யா மொழி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது:
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலம், கல்வி மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அக்குழந்தைகளுக்காக ரூ.5 லட் சம் நிரந்தர வைப்புத் தொகைத் திட்டம், தாய், தந்தை இருவரில் யாரேனும் ஒருவரை இழந்த குழந்தைக்கு உடனடியாக நிவாரணத் தொகை ரூ.3 லட்சம், பட்டப்படிப்பு வரை யிலான கல்வி மற்றும் விடுதி உள்ளிட்ட அனைத்து செலவி னங்கள் ஏற்பு, உறவினர் அல்லது பாதுகாவலரின் பராமரிப்பில் வளரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 ஊக்கத் தொகை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு விடுதி மற்றும் இல்லங்களில் முன்னு ரிமை, அனைத்து அரசு நலத் திட்டங்களிலும் முன்னுரிமை, அக்குழந்தைகளின் கல்வி, வளர்ச்சி மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ஆகியவற்றை கண்காணிக்க மாவட்டந்தோறும் சிறப்பு குழுக் கள் என தொலைநோக்குப் பார்வையுடன் உத்தரவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அனைத்துக் குழந்தைகளின் சார்பிலும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் என்ற முறையிலும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.