புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிவதற்காக 12 செவிலியர்களை தேர்வு செய்து புதுக்கோட்டை எம்எல்ஏ வை.முத்துராஜா நியமித்துள்ளார்.
புதுக்கோட்டை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் 500-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கை களில் கரோனா தொற்றாளர் களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு, பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் கூடுதல் நேரம் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ டாக்டர் வை.முத்துராஜா, தனது செலவில் 12 செவிலியர்களை தேர்வு செய்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் அண்மையில் ஒப்படைத்துள்ளார். இதுதவிர, மருத்துவமனைக்கு வெளியே பொதுமக்களுக்கு உதவி செய்வ தற்காக 3 தன்னார்வலர்களையும் அவர் நியமித்துள்ளார். இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித் துள்ளனர்.
இதுகுறித்து எம்எல்ஏ வை.முத்துராஜா, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் கரோனா வார்டில் தேவையான எண்ணிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள் இருந்தாலும், கரோனா தொற் றாளர்களின் எண்ணிக்கை அதிக ரித்து வருவதால், மருத்துவ பணி யாளர்களின் எண்ணிக்கையை யும் அதிகரிக்க வேண்டியுள்ளது.
எனவே, தகுதியான 12 செவிலி யர்களை தேர்வு செய்து, மருத் துவக் கல்லூரி நிர்வாகத் திடம் ஒப்படைக்கப்பட்டு, அவர் கள் மருத்துவக் கல்லூரி மருத்து வ மனையில் பணியாற்றி வருகின் றனர். இவர்களுக்கு தலா ரூ.10,000 சம்பளத்தை நானே கொடுக்க உள்ளேன். 12 செவிலியர்களை நியமித்ததன் மூலம் மற்ற செவி லியர்களின் பணிச் சுமை ஓரள வுக்கு குறைந்துள்ளது.
மருத்துவமனையில் எனது சார் பில் நியமிக்கப்பட்டுள்ள தன் னார்வலர்கள் 3 பேரும் கரோனா வார்டுக்கு வரும் பொதுமக் களுக்கு வழிகாட்டியாக விளங்கி வருகின்றனர் என்றார்.