திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கோவாண்டக் குறிச்சியைச் சேர்ந்த தனபால் மகன் இளையராஜா(28). தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் காவலராக பணியாற்றி வந்த இவர், கடந்த சில நாட் களாக மத்திய சிறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
திருச்சியிலிருந்து கோவாண்டக்குறிச்சிக்கு நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருவானைக்காவல் ஒய் பிரிவு பகுதியில் சென்றபோது, சென்னை பைபாஸ் சாலையில் இருந்து வந்து கொண்டிருந்த ஒரு லாரி அரியலூர் செல்வதற்காக திரும்பியபோது, இளையராஜா சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், அவர் படுகாயமடைந்தார்.
கொள்ளிடம் போலீஸார் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே இளையராஜா உயிரிழந்தார்.