Regional01

சேலம் மாவட்டத்தில் 26,974 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் கட்டுப் படுத்தப்பட்ட பகுதியில் உள்ள 6,766 வீடுகளில்வசிக்கும் 26,974 பேர் தனிமைப் படுத்தப்பட்டு சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக 900-க்கும் மேற் பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றினால் ஒரே பகுதியில் 3 முதல் 5 பேர் பாதிக்கப் பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் வீட்டில் இருந்து வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரு கின்றனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தொற்று கண்டறியும் பணி, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்குதல், சுகாதாரப் பணிகள்தீவிரப்படுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி களின் எண்ணிக்கை 175 ஆக இருந்தது. தற்போது, அவை 163 ஆக குறைந்துள்ளது. கட்டுப் படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 6 ஆயிரத்து 766 வீடுகளில் வசிக்கும் 26 ஆயிரத்து 974 பேர் தனிமைப் படுத்தப்பட்டு சுகாதாரத் துறையின ரின் கண்காணிப்பில் உள்ளனர்.

இதனிடையே, சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை சில தினங்களுக்கு முன்னர் 5 ஆயிரத்து 795 ஆக இருந்த நிலையில், தற்போது, தொற்றினால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “மாவட்டத்தில் தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், ஒரே பகுதியில் அதிகமானோர் பாதிக்கப் படுவது குறைந்துள்ளது. எனவே, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது” என்றனர்.

SCROLL FOR NEXT