Regional02

இணையவழியில் அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி முகாம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ‘நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு’ குறித்த இணையதளம் வழியிலான பயிற்சி முகாம் நடந்தது. அலங்கார மீன் வளர்ப்பின் முக்கியத்துவம், அலங்கார மீன் இனங்கள், கண்ணாடித் தொட்டி வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல், அலங்கார மீன் உணவு மற்றும் உணவு மேலாண்மை, மண் மற்றும் நீர்த்தர மேலாண்மை, அலங்கார மீன் இன நோய்கள் மற்றும் மேலாண்மை, அலங்கார மீன் வளர்ப்பு பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியை மீன் வளர்ப்புத்துறை தலைவர் சா.ஆதித்தன் நடத்தினார். இதில், தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர், பிற மாநிலங்களைச் சேர்ந்த 5 பேர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT