தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு நகராட்சி பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் ரூ.22 லட்சத்துக்கான வரைவோலையை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் சங்கத் தலைவர் கமலநாதன் நேற்று வழங்கினார்.
இதேபோல, திருச்சி மாநகராட்சி பொறியாளர் சார்பில் ரூ.3 லட்சத்துக்கான வரைவோலை அமைச்சரிடம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது மாநகராட்சி நகரப் பொறியாளர் எஸ்.அமுதவள்ளி, செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உடனிருந்தனர்.