திருநெல்வேலியில் கரோனா வைரஸ் அரக்கன் வேடத்தில் இருசக்கர வாகனத்தில் வீதிவீதி யாகச் சென்று ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் திருமலைநம்பி என்பவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
கரோனா அச்சத்தையும் தாண்டி ஊரடங்கு காலத்தில் தெருக்களிலும், சாலைகளிலும் பலர் வாகனங்களில் சுற்றித் திரிகிறார்கள். அவர்களிடையே கரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைரஸை அரக்கன் போல் சித்தரித்து தலைகவசம் வடிவமைத்து அதை அணிந்து கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வீதிவீதியாக இவர் சென்று, கரோனா வைரஸ் குறித்து சிறிய ஒலிபெருக்கி மூலம் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.