Regional02

நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் - தடுப்பூசி காலியானதால் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் : போலீஸாருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்

செய்திப்பிரிவு

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் டோக்கன் கொடுத்து, அதன்படி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை, தடுப்பூசிபோட 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட பலர் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

டோக்கன் கிடைத்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டது. தடுப்பூசி இல்லாத நிலையில், டோக்கன் கிடைக் காதவர்களுக்கு நாளை(மே29) போடப்படும் என அங்கிருந்த போலீஸார் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால், தங்களுக்கும் இன்றே தடுப்பூசிபோட வேண்டும்என போலீஸாருடன் பொது மக்கள்வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அலைக்கழிப்பதாக புகார்

SCROLL FOR NEXT