Regional01

பெருந்துறை மருத்துவமனையில் : கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு 10 படுக்கைகள் ஒதுக்கீடு :

செய்திப்பிரிவு

கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தனியாக 10 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

கோபி அரசு மருத்துவமனையில் ஆலம் பவுண்டேசன் சார்பில், மருத்துவமனைக்குத் தேவையான கட்டில், மெத்தை, சக்கர நாற்காலி, பல்ஸ் ஆக்சி மீட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மருத்துவமனையில் படுக்கை வசதிகள் குறித்தும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவ அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்,

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 10 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவையான மருந்துகளும் தயார் நிலையில் உள்ளது, என்றார்.

SCROLL FOR NEXT