கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். 
Regional02

ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் ஆட்சியர் ஆய்வு :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி பார்வையிட்டு, செல்போன் மற்றும் தொலைபேசி வாயிலாக கரோனா நோய் தொற்று தொடர்பாக ஆக்சிஜன் படுக்கை வசதி, கரோனா நோய் தடுப்பூசி மற்றும் மருத்துவ உதவிகள் கோரி வரப்பெற்ற அழைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஆட்சியர் கூறிய தாவது: மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை விவரம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தேவையான தகவல்கள் வழங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்த கட்டளை மைய எண்களான 04343 - 233021, 233022, 233023, 233024, 233025 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் கோவிந்தன், வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) குருநாதன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT