Regional02

200 ஆண்டுகள் பழமையான : ஐம்பொன் விநாயகர் சிலை திருட்டு :

செய்திப்பிரிவு

கோயில் குருக்கள் நேற்று முன்தினம் வழிபாடு முடிந்து கோயிலை பூட்டிவிட்டுச் சென்றார். மீண்டும் நேற்று கோயிலை திறக்க வந்தபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோயிலினுள் இருந்த ஐம்பொன் சிலை திருடப்பட்டிருப்பதை கண்டு அதிரிச்சி அடைந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செங்கல்பட்டு தாலுக்கா போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்களைக் கொண்டு தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT