வேகமாக பரவி வரும் கரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்த தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 88 இடங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் கிராமங்களுக்கே நேரடியாக சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் 10,562 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 8,816 பேர் முதல் தவணை, 5,333 பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்.
முன்களப் பணியாளர்கள் 21,914 பேரில் இதுவரை 10,418 பேர் முதல் தவணை, 5,126 பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்ட 2,11,441 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ண யிக்கப்பட்டு, இதுவரை 26,949 பேர் முதல் டோஸ், 9,863 பேர் 2-வது டோஸ் போட்டுள்ளனர்.
45 முதல் 60 வயது வரை உள்ள 2,92,765 பேரில் இதுவரை 35,197 பேர் முதல் டோஸ், 7,667 பேர் 2-வது டோஸ் போட்டுள்ளனர். 18 முதல் 44 வயது வரை உள்ள 8,32,117 பேரில் இதுவரை 9,763 பேர் முதல் டோஸ் போட்டுள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தம் 13,68,799 பேருக்கு கரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு, இதுவரை 91,138 பேர் முதல் டோஸ் போட்டுள்ளனர். 27,989 பேர் 2-வது டோஸ் போட்டுள்ளனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 24,920 டோஸ் கோவிஷீல்டு, 2,760 டோஸ் கோவாக்சின் என மொத்தம் 27,680 தடுப்பூசிகள் இருப்பில் இருந்தன.