கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, நெடுவாசல், வெள்ளாளவிடுதி உள்ளிட்ட இடங்களில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியது: கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தேவையான படுக்கை வசதிகள், கவனிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ எம்.சின்னத்துரை, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.