தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 34 தனியார் மருத்துவமனைகளில், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் கரோனா தொற்றுக்கு பொதுமக்கள் இலவசமாக சிகிச்சை பெறலாம் என ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் தெரிவித் துள்ளது:
தஞ்சாவூர் ஆட்சியர் அலுவல கத்தில் மே 26-ம் தேதி நடை பெற்ற கரோனா தடுப்பு நடவ டிக்கை குறித்த ஆய்வுக் கூட்டத் தில் முதல்வரின் விரிவான மருத் துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தனியார் மருத்து வமனைகளில் சிகிச்சை பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில், தமிழக முதல்வ ரால் ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டவாறு, தஞ்சாவூர் மாவட் டத்தில் உள்ள 34 தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு வருமானம் 72 ஆயிரத் துக்கு கீழ் இருக்கும் அனை வரும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீ்ழ் சிகிச்சை பெற தகுதியானவர்கள். அவர்களிடம் மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை இல்லாதபட்சத்திலும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெற உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகளுக்கு கரோனா சிகிச்சை அளிக்க கேட்டுக் கொள் ளப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகள் விவரம்...
கும்பகோணம்: ஏவிஆர்.ரமணி பாலி கிளினிக், காருண்யா சுகாலயா மருத்துவமனை, கே.எஸ்.மருத்துவமனை, மெட்வே மருத் துவமனை, எஸ்.டி.மருத்துவமனை, விஜய் பாலி கிளினிக்.
பட்டுக்கோட்டை: ஐஸ்வர்யா கிளினிக், திராவிடன் மருத்துவ மனை, கனகேச தேவர் நினைவு மருத்துவமனை, ஷிஃபா மருத்துவமனை, சிவம் நர்சிங் ஹோம், நாடி மருத்துவமனை.