திருநெல்வேலியில் திருக்கோயில் களில் அன்னதானக் கூடங்களில் தயார் செய்யப்பட்ட 3,650 உணவுப் பொட்டலங்கள் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலத்தில் உள்ள திருக்கோயில்கள் சார்பாக மதியம் அன்னதான கூடத்தில் தயார் செய்யப்பட்ட 3,150 உணவுப் பொட்டலங்களும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இரவில் தயார் செய்யப்பட்ட 500 உணவுப் பொட்டலங்களும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உறவினர்களுக்கும், கங்கை கொண்டான் இலங்கை அகதிகள் முகாம் மையம், உயர் சிறப்பு மருத்துவமனை, மேலப்பாளையம் அரசு மருத்துவமனை, மேலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், பாட்டப்பத்து ஆரம்ப சுகாதார நிலையம், வீரராகவபுரம் நகர ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் விநியோகிக்கப்பட்டது.