திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா. கஜேந்திரபாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை யால் டாபே டிராக்டர் நிறுவனம் மூலம் விவசாயிகள் இலவசமாக கோடை உழவு செய்து பயன்பெறலாம். இந்த திட்டத்தில் சிறு,குறு விவசாயிகள் தங்களிடம் உள்ள 2 ஏக்கர் நிலம் வரை இலவசமாக உழவுப்பணி மேற்கொள்ளலாம். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் உழவன் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் அல்லது முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.