Regional02

உரம், பூச்சி மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரம், பூச்சி மருந்துகள் விற்பனையை காலை 6 மணி முதல் 10 மணி வரை வழிகாட்டுதல்படி விற்பனை செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முழு ஊரடங்கு அறிவித்துள்ள போதிலும் அத்தியாவசியமான வேளாண் பணிகளுக்கு தேவையான விதை, உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில், விவசாயிகள் ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை முனைய கருவிகளில் கைரேகை வைக்காமல் தங்களுடைய செல்போனில் பெறப்படும் ஓடிபியைப் பயன்படுத்தி ரசீது பெறலாம்.

விதைப்புக்கு தேவையான சிறுதானிய பயிர் விதைகள், எண்ணை வித்துப் பயிர் விதைகள், அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில், 50 சதவீதம் மானியத்தில் வழங்க இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை அரசு வழங்கி உள்ள வழிகாட்டுதல்படி விற்பனை மேற்கொள்ளப்படும்.

மேலும், வேளாண் பொருட்களாகிய விதை, உரம் மற்றும் பூச்சி மருந்துகள் கிடைப்பதிலும், வேளாண் விளை பொருட்கள் விற்பனை மேற்கொள்வதிலும், சிரமங்கள் ஏதேனும் இருந்தால், வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

SCROLL FOR NEXT