ஒருங்கிணைந்த மண் வள மேலாண்மை முறைகள் குறித்து, இணைய வழியில் நாளை (29-ம் தேதி) நடைபெறவுள்ள பயிற்சியில் விவசாயிகள் பங்கேற்று பயடையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைய வழி பயிற்சி குறித்து சேலம் சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மண் ஒரு விலை மதிப்பற்ற இயற்கை வளம். நல்ல மண்ணின் வளம், நல்ல மனித ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. மண்ணின் வளம் மற்றும் தரம் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. விவசாயிகள், மண் வளத்தை அறிந்து, விவசாயத்தை மேம்படுத்த, ஒருங்கிணைந்த மண் வள மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில், இணைய வழியில் நாளை (29-ம் தேதி) காலை 10 மணி முதல் 11.30 மணி வரை பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில், வளமான மண்ணின் தன்மைகள், செடியின் வளர்ச்சிக்கு தேவைப்படும் அடிப்படை ஊட்டச்சத்துகள், மண் வளத்தை மேம்படுத்தும் முறைகள், மண் சார்ந்த பிரச்சினைகளும் அதன் மேலாண்மையும், மண் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் போன்ற பல தகவல்களை பயிற்சியின் மூலம் அறிந்து கொள்ளலாம். மண் மாதிரிகள் சேகரிக்கும் முறை, நீர் பரிசோதனை போன்ற பல தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
கோவை வேளாண்மை பல்கலைக் கழக விரிவாக்க கல்வி இயக்குநர் மு.ஜவஹர்லால், பயிற்சியை தொடங்கி வைத்து பேசுவார். தொழில்நுட்பம் குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், தொழில்நுட்ப வல்லுநர் (மண்ணியல்) மலர்க்கொடி ஆகியோர் பேசுவர்.
எனவே, விவசாய பெருமக்கள் அனைவரும் https://meet.google.com/utd-yibp-zxp என்ற லிங்க்-ஐ கிளிக் செய்து, இணையவழி பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம்- 636 203 என்ற முகவரியிலும், 0427- 242 2550, 96775 51797, 90955 13102 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.