விழுப்புரத்தில் திமுக சார்பில் உணவு பொட்டலங்களை அமைச்சர் பொன்முடி வழங்கினார். 
Regional01

விழுப்புரத்தில் திமுக சார்பில் உணவு வழங்கல் :

செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் திமுக சார்பில் தினமும் உணவு வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

கரோனா ஊரடங்கு காலத்தில் யாருக்கெல்லாம் உணவு தேவைப்படுகிறது என்பதை அறிந்து திமுகவினர் உதவ வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அந்தவகையில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே எம்எல்ஏ லட்சுமணன் ஏற்பாட்டில் நேற்று முதல், நாள் தோறும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், பழைய பேருந்து நிலையம், வளவனூரில் அமைக்கப்பட்ட அன்புசுவர் என்ற அமைப்பின் மேடைகளில் சுமார் 300 பேருக்கு தேவையான காலை உணவு, மதிய உணவு, தண்ணீர் பாட்டில்களுடன் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.நேற்று இந்நிகழ்ச்சியை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தொடக்கி வைத்து பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார். அப்போது எம்எல்ஏ புகழேந்தி, முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட அவைத் தலைவர் ஜெயசந்திரன், நகர செயலாளர் சக்கரை, ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, பிரபாகரன், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT