கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. இம்முகாமினை மேற்பார்வை பொறியாளர் ஆஞ்சலா சகாயமேரி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். செயற்பொறியாளர்கள் வேல் மற்றும் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 115 அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதற்கான ஏற்பாடு களை உதவி செயற்பொறியாளர் கந்தசாமி செய்திருந்தார்.