Regional02

கரோனா பரவலை தடுக்க - கிராம அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை : பர்கூர் எம்எல்ஏ மதியழகன் தகவல்

செய்திப்பிரிவு

கரோனா பரவலை தடுக்க, கிராம அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என பர்கூர் திமுக எம்எல்ஏ மதியழகன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் திமுக எம்எல்ஏ மதியழகன், கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சளி, இருமல், காய்ச்சல், தலைவலி போன்றவற்றால் பாதிக்கப் படுபவர்கள் தன்னிச்சையாக மருந்துகடைகளில் மருந்து வாங்கி குணமாக முயற்சி செய்கின்றனர். அதில் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்தால், அவர்கள் தனக்கே தெரியாமல் பல இடங்களுக்கு சென்று மற்றவர்களுக்கும் பரப்ப காரணமாகி விடுகின்றனர். நோய்த் தொற்று அதிகமாகும் போதுதான் மருத்துவமனைக்கு சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர். அவர் களுக்கு கரோனா உறுதி செய்யப்படும்போது, 25 முதல் 50 பேருக்கு அவர்களால் கரோனா தொற்று ஏற்பட்டு விடுகிறது. எனவே கரோனாவைக் கட்டுப்படுத்த, முதலில் கிராம அளவில், ஊராட்சி தலைவர், செயலாளர், கிராம செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மூலம், கிராம மக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறி தென்பட்டால், அவர்களுக்கு உடனே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், நுரையீரல் ஸ்கேன் செய்து தொற்று அதிகம் பாதிக் கப்பட்டிருந்தால், அவர்களுக்கு உரிய சிகிச்சையை உடனே அளித்து, அவர்களை குணப்படுத்தலாம். இதன்மூலம் கரோனா பரவல் தொடர்பு அறுக்கப்பட்டு, 30 நாட்களில் கரோனா பரவும் எண்ணிக்கை வெகுவாக குறையும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT