திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வள்ளுவர் நகர் கோனார் தெருவில் ஊரடங்கு விதிகளை மீறி இறைச்சிக் கடை செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, திருவெறும்பூர் வட்டாட்சியர் பிரகாஷ், சார்பு ஆய்வாளர் ஜெகதீசன் ஆகியோர் அந்த கடையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், இறைச்சி விற்றது தெரியவந்ததால் கடைக்கு சீல் வைக்கப்பட்டு, உரிமையாளர் முஸ்தபா(41) மற்றும் சாதிக்(27) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.