Regional01

போலீஸாருக்கு சானிடைசர் வழங்கல் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் முழுஊரடங்கின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு கரோனா தடுப்பு உபகரணங்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் வழங்கினார்.

கரோனா பரவலை தடுக்க பாதுகாப்பு பணியிலும், ரோந்து பணியிலும் போலீஸார் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்களான முகக்கவசம், பாக்கெட் சானிடைசர், கையுறைகள், கபசுர குடிநீர் பொடி ஆகியவற்றை எஸ்பி வழங்கினார். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) சுப்பாராஜூ, ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT