Regional02

வேலம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

வேலம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் வேலம்பட்டி அருகே உள்ள பாளேகுளி அடுத்த கோட்டான்குண்டு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பெரியசாமி (42). இவரது மகன்கள் பிரவீன்குமார் (14), கிருபா (12). நேற்று அதே பகுதியில் உள்ள பெருமாள் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் பெரியசாமி தனது மகன்கள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் (14) என்பருக்கும் நீச்சல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற கிருபா நீரில் மூழ்கினார். அதிர்ச்சியடைந்த பெரியசாமி மகனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பிரவீன்குமார் மற்றும் முருகேசன் கூச்சலிட்டனர். சிறிது நேரத்தில் தந்தையும், மகனும் நீரில் மூழ்கினர். கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், நாகரசம்பட்டி போலீஸ் எஸ்ஐ பச்சமுத்து மற்றும் போலீஸார் நீரில் மூழ்கிய பெரியசாமி, கிருபா ஆகியோரை சடலமாக மீட்டனர். நாகரசம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT