ஏர்வாடியில் ஆதரவற்றவர்கள், மனநோயாளிகளுக்கு உணவு வழங்கிய நேதாஜி நற்பணி மன்றத்தினர். 
Regional01

நேதாஜி மன்றத்தினர் சார்பில் ஏர்வாடியில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கல் :

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா ஊரடங்கால் கூலித் தொழிலாளர்கள், ஆதரவற்ற வர்கள், மனநோயாளிகள் உள்ளிட்ட பலரும் உணவு கிடைக்காமல் சிரமப் படுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் ஆதரவற்றவர்கள், மனநோயாளிகள் அதிக அளவில் உள்ளனர். ஏர்வாடி தர்ஹா மற்றும் காட்டுப்பள்ளி தர்ஹா பகுதியில் தங்கியுள்ள ஆதரவற்றவர்கள், மனநோயாளிகள் 500 பேருக்கு கடலாடி அருகே சாத்தங்குடி, வெள்ளாங்குளம் கிராமங்களைச் சேர்ந்த நேதாஜி நற்பணி மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மதிய உணவு, தண்ணீர் பாட்டில், முகக்கவசம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சேது சீமை பட்டாளம் மற்றும் புனவாசல் கிராம இளைஞர்களும் கலந்து கொண்டு உணவு வழங்கினர்.

SCROLL FOR NEXT