புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம், சேத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, மாவட்டச் செயலாளர் லிங்கம் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வத்திராயிருப்பில் முன்னாள் எம்எல்ஏ டி.ராமசாமி தலைமை யிலும், திருச்சுழியில் நீதிராஜன் தலைமையிலும், வில்லிபுத்தூரில் பலவேசம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர் பாத்திமா நகரில் மார்க்சிஸ்ட் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு, நகர் குழு உறுப்பினர் ராஜா தலைமை வகித்தார். நகர் செயலர் முருகன் உரையாற்றினார்.
தேவாரம்
மதுரை