சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்த நிலையில், சேலத்தில் 67 மிமீ மழை பதிவானது.
வங்கக் கடலில் ஏற்பட்ட யாஸ் புயல் காரணமாக, சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று முன்தினம் காற்றுடன் கூடிய மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சேலத்தில் 67 மிமீ மழை பதிவானது. மாவட்டத்தில் பிற ஊர்களில் பெய்த மழை (மில்லி மீட்டரில்) விவரம்: சங்ககிரி 50.30, தம்மம்பட்டி 40, வீரகனூர் 19, ஏற்காடு 16.20, எடப்பாடி 12, ஓமலூர் 11.40, பெத்தநாயக்கன்பாளையம் 8, காடையாம்பட்டி 7.20, ஆத்தூர் 5.10, வாழப்பாடி மற்றும் கெங்கவல்லியில் தலா 5, ஆனைமடுவு 3 மிமீ மழை பதிவானது.