குன்னம் அருகே ஊரடங்க மீறி கோயில் கும்பாபிஷேகம் நடத்திய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன் னம் வட்டம் வீரமாநல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அண்மையில் புதுப்பிக்கப்பட்டு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ளபோது, இக்கோயிலில் தடையை மீறி கும்பாபிஷேக விழா நடத்தியது தொடர்பாக, கோயில் நிர்வாகிகள், பூசாரி உள்ளிட்ட 5 பேர் மீது குன்னம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.