தமிழ்நாடு விவசாயிகள் சங்கமாவட்ட செயலாளர் ஆர்.குமார்வெளியிட்ட அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் அரசு தாலுகா மருத்துவமனை, குன்னத்தூரில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், வெள்ளிரவெளி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கரோனா தொற்று பரவலுக்கு ஏற்ப மருத்துவம் பார்க்க போதிய வசதிகள் இல்லை.
ஊத்துக்குளி அரசு மருத்துவமனையிலும், குன்னத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் குறைந்தபட்சம் 30 ஆக்சிஜன்படுக்கைகள் உள்ளடக்கிய 50 கரோனா படுக்கை வசதிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஏற்படுத்தி, நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்கவேண்டும். போதுமான மருத்துவர், செவிலியர், இதர பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்.
கரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தங்களை தனிமைப்படுத்திகொள்ள, ஊத்துக்குளி தாலுகாவுக்கு 100 படுக்கைகள் வசதியுடன் கூடிய பராமரிப்பு மையம் ஏற்படுத்த வேண்டும்.
ஊத்துக்குளி அரசு மருத்துவமனை, குன்னத்தூர் மற்றும் வெள்ளிரவெளி ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாள்தோறும் காலை முதல் மாலை வரை கரோனா பரிசோதனை மேற்கொள்வதுடன், கூடுதலாக இலவச ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்சிஜன் பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி போடும் மையங்களை அருகாமையில் உள்ள பள்ளி வளாகங்களில் அமைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.