வடலூர் வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமசாலை 155-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கொடியேற்றப்பட்டது. 
Regional02

வடலூர் சத்திய தரும சாலையின் 155-வது ஆண்டு தொடக்க விழா :

செய்திப்பிரிவு

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இங்கு வள்ளலார் ராமலிங்க அடிகளார் 1867-ம் வைகாசி மாசம் 11-ம் நாள் சத்திய தருமசாலையை நிறுவினார். அதன் 155-ம் ஆண்டு தொடக்கவிழா நேற்று நடந்தது. இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக மிக எளிமையாக கொடியேற்றம் மற்றும் அன்னதானம் மட்டும் நடைபெற்றது. ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த தர்ம சாலையில் 155 ஆண்டுகளாக தொடர்ந்து மூன்று வேளையும் சாதி, மதம், இனம், மொழி, தேசம் என எவ்வித பேதமுமின்றி அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மழை, வெள்ளம், புயல் என இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது கூட தொடர்ந்து தினசரி மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT