Regional02

மதுபானங்களை கடத்திய ஊழியர் உட்பட 6 பேர் கைது :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலியில் உள்ள டாஸ்மாக் கடையில் கள்ளச்சந்தையில் விற்க மதுபானங்களை கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அந்த கடையைத் திடீரென போலீஸார் சோதனையிட்டனர். அப்போது அங்கு கடையைத் திறந்து மதுபானங்களை விற்பனை செய்ய முயன்ற விற்பனையாளர் ராஜகோபாலன், மதுபாட்டில் களை வாங்க வந்த ஆர்.எஸ்.மங்கலம் கண்ணன், கரிகாலன், தினேஷ், வினோத்குமார், சதீஷ் குமார் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

மதுபாட்டில்களை வாங்க வந்தவர்களிடம் இருந்து ரூ. 4.70 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டது. தலைமறைவான மேற் பார்வையாளர் செந்தில்குமார், விற்பனையாளர் பூபதி ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT