தஞ்சாவூர் ஏ.ஒய்.ஏ. நாடார் தெருவில் உள்ள கூலித் தொழிலாளர்கள் குடும்பத்துக்கு காவல் துறை சார்பில் நிவாரணப் பொருட்களை நேற்று வழங்குகிறார் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய். உடன் டிஎஸ்பி பாரதிராஜன் உள்ளிட்டோர் உள்ளனர். 
Regional02

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரே நாளில் - ஊரடங்கு விதியை மீறியதாக 352 வழக்குகள் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதியை மீறியதாக, ஒரே நாளில் 352 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ் முக் சேகர் சஞ்சய் தெரிவித்தார்.

தஞ்சாவூர் ஏ.ஒய்.ஏ. நாடார் தெருவில் ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவிக்கும் கூலி தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு போலீஸார் சார்பில் நிவாரண பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நேற்று வழங்கினார்.

பின்னர், தேஷ்முக் சேகர் சஞ்சய் செய்தியாளர்களிடம் கூறியது: முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதிக்கப்பட்ட வாகனங்களைத் தவிர, மற்ற வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு சோதனைக்கு பிறகு அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. அனுமதி இல்லாத வாகனங்களைப் பறிமுதல் செய்து வருகிறோம். நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் ஊரடங்கு விதிமுறையை மீறியதாக 352 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 316 வாகனங்கள் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன.

காய்கறி விற்பனை வண்டிகள் தடைபடாமல், அனைத்து இடங்க ளுக்கும் சென்று வர போலீஸார் முழு ஒத்துழைப்பு அளித்து கண்காணித்து வருகின்றனர்.

கரோனா ஊரடங்கால், வேலை யிழந்து தவிக்கும் 500 கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தி னருக்கு, தனியார் அமைப்புடன் இணைந்து ஒரு குடும்பத்துக்கு, 15 நாட்களுக்குத் தேவையான மளிகை, காய்கறிகளை வழங்கி வருகிறோம்.

தஞ்சாவூரில் ஊரடங்கு விதி முறையை மீறித் திறந்திருந்த 2 கடைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி கடையைத் திறந் தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு இடத்தில் சோதனை சாவடி அமைத்து வாகன தணிக்கை நடத்தும் போது, பொதுமக்கள் வேறு வழியாகச் சென்று வருகி றார்கள். இதைத் தடுக்கும் வகையில், மாற்று வழிகளைத் தடுப்பு வைத்து அடைத்து விட்டு, முக்கிய சாலைகளில் சோதனை செய்த பிறகே வாகனங்கள் அனு மதிக்கப்படுகின்றன. இதனால் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்வதில் தடை ஏற்படாது என்றார்.

தஞ்சாவூர் நகர டிஎஸ்பி பாரதிராஜன், இன்ஸ்பெக்டர் ராம தாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT