Regional04

பிரசவித்த பெண் கரோனாவால் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் செல்லியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மனைவி ரஞ்சிதா(28). நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த மே 12 அன்று பிரசவத்துக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மே 23 அன்று இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனைகளின் முடிவில் இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அரசு தலைமை மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT