ஆலங்குளம் அருகே உள்ள நல்லூரைச் சேர்ந்தவர் ஜெய்சன் (46). அரிசி ஆலை நடத்தி வந்தார். இருசக்கர வாகனத்தில் ஆண்டிப்பட்டி விலக்கு அருகே சென்றபோது, காட்டுப்பன்றிகள் சாலையின் குறுக்கே புகுந்ததால் நிலை தவறி கீழே விழுந்த ஜெய்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.