திருநெல்வேலியில் ரேஷன் கடைகளில் கூட்டம் அலைமோதிய தால் கரோனா பரவல் அச்சம் நிலவியது.
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழுஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க நேற்றுமுதல் ரேஷன் கடைகள் காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை செயல்பட அரசு அனுமதித்தது. அதன்படி திருநெல்வேலியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. கரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் பெறவும், அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் இந்த கடைகளுக்கு ஏராளமானோர் திரண்டனர். இதனால் கரோனோ பரவல் அச்சம் நிலவியது. பாளையங்கோட்டை மன காவலம்பிள்ளை நகர் கென்னடி தெருவில் கூட்டுறவு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க கூட்டம் கூடியதை அடுத்து அங்கு போலீ ஸார் வரவழைக்கப்பட்டனர். போலீஸார் அங்குவந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். இதுபோல் பாளையங்கோட்டை கோட்டூர் சாலையிலுள்ள ரேஷன் கடையிலும் சமூகஇடைவெளியை கடைபிடிக்காமல் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அங்கும் போலீஸார் வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். இதுபோல் மாவட்டத்தில் பல்வேறு ரேஷன் கடைகளிலும் கூட்டம் கூடியிருந்தது.