Regional01

சமூக இடைவெளி பின்பற்றாததால் - தலைவாசல் அருகே மருத்துவமனைக்கு ‘சீல்’ :

செய்திப்பிரிவு

தலைவாசல் அருகே சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் செயல்பட்ட மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தலைவாசலை அடுத்த சார்வாய் புதூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த மருத்துவமனையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்றாமலும், சமூக இடை வெளியைக் கடைபிடிக்காமலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக, சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதனடிப்படையில், தலைவாசல் வட்டாட்சியர் அன்புச்செழியன், இன்ஸ்பெக்டர் நாகராஜ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பன்னீர் செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள், சார்வாய்புதூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த மருத்துவமனைக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு, கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரிவர பின்பற்றாமலும், சமூக இடை வெளியைக் கடைபிடிக்காமலும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மருத்துவமனைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்த அதிகாரிகள், அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.

SCROLL FOR NEXT