Regional02

சாலையில் வாகனங்களில் சுற்றியவர்களுக்கு அபராதம் :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் தளர்வில்லா ஊரடங்கின் போது வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களிடம் போலீஸார் அபராதம் வசூல் செய்தனர்.

தமிழகத்தில் கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால், கடந்த 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. நேற்று முதல் தளர்வில்லா ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கு அமலில் உள்ள போதும், கிருஷ்ணகிரி நகரில் தேவையின்றி சிலர் வாகனங்களில் சுற்றித்திரிந்து வருகின்றனர். நேற்று கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா, பிஎஸ்என்எல் அலுவலகம், ராயக்கோட்டை மேம்பாலம், தாலுகா அலுவலகம், ஆவின் மேம்பாலம், பழையபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் பல பேர் மருந்து வாங்கச் செல்வதாக கூறினர். ஆனால் மருந்து சீட்டோ, மருத்துவர்கள் குறிப்போ இல்லாமல் சுற்றியது தெரிந்தது. சரியான காரணம் உள்ளவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பிய போலீஸார், தேவையின்றி சுற்றித்திரிந் தவர்களுக்கு முதற்கட்டமாக அபராதம் விதித்தனர். மேலும் வாகன எண்களை பதிவு செய்து, மீண்டும் பிடிபட்டால், வாகனத்தை பறிமுதல் செய்வோம் என எச்சரித்து அனுப்பினர்.

ஓசூரில் தீவிர பாதுகாப்பு

SCROLL FOR NEXT