Regional02

கிருஷ்ணகிரி எஸ்பி அலுவலகத்தில் கரோனா கட்டுப்பாட்டு சேவை மையம் :

செய்திப்பிரிவு

ஊரடங்கை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், கரோனா காவல் கட்டுப்பாட்டு சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி எஸ்பி பண்டிகங்காதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எஸ்பி அலுவலகத்தில் முதியோர்களுக்கு உதவும் வகையில், ஹலோ சீனியர்ஸ், பெண்களுக்கான உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகளுக்காக உரிய அலுவலகத்திற்கு சென்று நிவாரணம் தேட முடியாத நிலை உள்ளது. அவர்கள் பயன்பெறும் வகையில், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கரோனா கட்டுப்பாட்டு சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. எஸ்பி அலுவலகத்தில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும். அவசரம் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பிற துறை அலுவலர்களை தொடர்பு கொள்ள இயலாதவர்கள் 89399 45100 மற்றும் 94981 01090 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு பாதுகாப்பு, தேவைகள், தகவல்கள் மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவித்தால் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் புகார்தாரர் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும் என்பதால் புகார் தெரிவித்த 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், ஊரடங்கு தொடர்பாக உள்ள சந்தேகங்களை 04343 - 237201 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

SCROLL FOR NEXT