Regional02

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு : நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால், நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள், பாரதிய தொழி லாளர் நலச்சங்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப் பதாவது:

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில், 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கையுறை, முகக்கவசம் அணிந்து முறையாக பணியாற்றிய நிலையிலும், 17-க்கும் மேற்பட்டோருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுங்கச்சாவடியில் பணிபுரிவதால், கரோனா தொற்று அதிக அளவில் பரவ வாய்ப் புள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும், நிர்வாகத்திற்கும் புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கரோனா முதல் அலையில், வழங்கியது போல் தற்போதும் ஒரு மாத ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கக் கூடிய பகுதியாக உள்ளது. தற்போதைய சூழலில், நாளொன்றுக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT