கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசினார். 
Regional02

கரோனாவில் இருந்து மக்களை முதல்வர் நிச்சயம் காப்பாற்றுவார் : அமைச்சர் காந்தி நம்பிக்கை

செய்திப்பிரிவு

கரோனாவில் இருந்து மக்களை முதல்வர் நிச்சயம் காப்பாற்றுவார் என கிருஷ்ணகிரியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் எஸ்பி பண்டிகங்காதர், செல்லக் குமார் எம்பி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, ஒய்.பிரகாஷ், ராமசந்திரன், மதியழகன், அசோக்குமார், தமிழ்செல்வம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சி பேதம் இல்லாமல் அனைவரின் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொண்டு வருகிறார். தேர்தல் நடைபெற்ற போதும், வாக்கு எண்ணிக்கை இடைப்பட்ட 2 மாதங்கள் கரோனா பரவலை தடுக்க அரசு கவனிக்கவில்லை. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2 மாதங்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த அளவிற்கு பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்பட்டு இருக்காது. கரோனா பணிகளில் யார் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கண்டிப்பாக கரோனாவில் இருந்து மக்களை முதல்வர் காப்பாற்றுவார் என்றார்.

SCROLL FOR NEXT