Regional02

18- 44 வயதுடையோருக்கு - கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம் :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டத்தில் 18 முதல் 44 வயதுடையோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் த.ரத்னா, எம்எல்ஏ கு.சின்னப்பா ஆகியோர் பணியை தொடங்கிவைத்தனர். இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் பேசியபோது, “18 முதல் 44 வயதுடையோரில் முதற்கட்டமாக மாற்றுத்திறனாளிகளுக்கும், பொதுமக்களுடன் அதிகளவில் இணைந்து பணியாற்றும் முன்னுரிமை நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது” என்றார். எஸ்.பி வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வீ.சி.ஹேமசந்த்காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 18 முதல் 44 வயதுடையோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை பெரம்பலூர் அஸ்வின் கூட்ட அரங்கில் தொடங்கிவைத்த எம்எல்ஏ எம்.பிரபாகரன், “பெரம்பலூர் மாவட்டத்தில் 18 முதல் 44 வயதுடைய 2,82,407 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது” என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட் சிக் குழுத் தலைவர் சி.ராஜேந் திரன், பெரம்பலூர் ஒன்றியக் குழுத் தலைவர் மீனா அண்ணா துரை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் 18 முதல் 44 வயதுடையோருக்கான கரோனா தடுப்பூசி போடும் பணியை கொடிக்கால்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆட்சியர் வே.சாந்தா, எம்எல்ஏ பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இந்நிகழ்வில், சுகாதாரத் துறை துணை இயக்குநர் கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT