திருநெல்வேலி உட்பட தென் மாவட்டங்களில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கால் சாலைகள், கடைவீதிகள் வெறிச்சோடின.
கரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அரசுமற்றும் தனியார் மருத்துவமனைகளும், ஆங்கில மற்றும் நாட்டு மருந்து கடைகளும், பெட்ரோல் நிலையங்கள், ஆவின் பாலகங்கள் மட்டும் திறந்திருந்தன. அரசு அலுவலகங்களில் குறைந்த அளவுக்கு ஊழியர்கள் வந்திருந்தனர். வங்கிகளில் 3-ல் ஒரு பங்கு ஊழியர்கள் பணிக்கு வந்தனர். வங்கிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை செயல்பட்டன. ஆனால், வங்கிகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள், கடைவீதிகள், முக்கிய பஜார் பகுதிகள்அனைத்தும் ஆட்கள் நடமாட்டம் இல்லாமலும் வாகன போக்குவரத்தும் இல்லாமல் வெறிச்சோடியிருந்தன. நகர மற்றும் கிராமப்புறபகுதிகளில் சிறிய வாகனங்களில் காய்கனி விற்பனை செய்யப்பட்டது. திருநெல்வேலி மாநகர பகுதிகளில் முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இ-பதிவு செய்தவர்களின் வாகனங்களை மட்டும் விசாரணைக்குப்பின் அனுமதித்தனர்.
தென்காசி
தூத்துக்குடி
அத்தியாவசிய காரணம் மற்றும் இ-பதிவு, இ-பாஸ் இல்லாதவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். வழக்கு பதிவு செய்ததுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அடையாள அட்டைகளுடன் பணிக்குச் சென்றனர். இருசக்கர வாகனங்களில் பணிக்கு சென்றவர்களை மறித்து, நிறுவனங்கள் ஏற்பாடுசெய்யும் நான்கு சக்கர வாகனங்களில் தான் பணிக்கு செல்ல வேண்டும் என, போலீஸார் அறிவுறுத்தினர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தூத்துக்குடி வி.வி.டி சந்திப்பு மற்றும் குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார்.
அவர் கூறும்போது, “தூத்துக்குடி மாவட்டத்தில் 2,000-க்கும்மேற்பட்ட போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் காலத்தில் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம்” என்றார்.
கோவில்பட்டி
கன்னியாகுமரி
கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை போலீஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவை மற்றும் முன்களப் பணியாளர்கள் தவிரசாலையில் சுற்றுவோர் எச்சரித்து அனுப்பப்பட்டனர். கரோனா ஊரடங்கை மதிக்காமல் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.