திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நேற்று காலை நிலவரப்படி 4 மி.மீ. , ராதாபுரத்தில் 2.2 மி.மீ, பாபநாசத்தில் 2 மி.மீ. மழை பெய்திருந்தது.
பாபநாசம் அணைக்கு 1,324கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 254 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. நீர்மட்டம் 112.20 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு 152 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 250 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. நீர்மட்டம் 84.40அடியாக இருந்தது. மற்ற அணைகளின் நீர் இருப்பு: சேர்வலாறு- 125.33 அடி, வடக்கு பச்சையாறு- 42.49 அடி, நம்பியாறு- 12.53 அடி, கொடுமுடியாறு- 20.45 அடி.