Regional01

தீ விபத்தில் கடைகள் சேதம் :

செய்திப்பிரிவு

செய்யாறில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கடைகள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன.

தி.மலை மாவட்டம் செய்யாறு நகரம் கெங்கையம்மன் கோயில் அருகே சேட்டு என்பவருக்கு சொந்தமான காய்கறி கடை உள்ளது. அதன் அருகே மனோகருக்கு சொந்தமான பெட்டி கடை உள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு, இருவரது கடைகளும் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், இரண்டு கடைகளிலும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

SCROLL FOR NEXT