Regional01

தன்னார்வலர்களுக்கு சுகாதாரத்துறை ஆலோசனை :

செய்திப்பிரிவு

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் தன்னார்வலர்கள், சுகாதாரத் துறையினருடனான ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. நகராட்சி ஆணையர் ஸ்டான்லிபாபு தலைமை வகித்தார். அரசு மருத்துவர்கள் சுதாகொடி,ரேணுகாதேவி ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் அலுவலர்கள் பேசும்போது, கரோனா தடுப்புநடவடிக்கையில் தன்னார்வலர் கள், சுகாதாரத் துறையினர் பங்களிப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தன்னார்வலர்கள் நகரில் உள்ள அனைத்து வார்டு களுக்கும் சென்று ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை பேர் உள்ளனர், உடல்நல பாதிப்பு, தடுப்பூசி போட்டவர்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

தன்னார்வலர்களுக்கு நகராட்சி அலுவலகம் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும், என்றனர்.

SCROLL FOR NEXT