Regional01

ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட தேவைக்கு - காவல் உதவி மையத்தை அணுக எஸ்பி அறிவுறுத்தல் :

செய்திப்பிரிவு

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பு, தேவைகள், தகவல்கள் மற்றும் இதர பிரச்சினைகள் தொடர்பாக காவல்துறை உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என சேலம் மாவட்ட எஸ்பி தீபா காணிகர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை வாகனங்கள் மூலம் தங்களது வீடுகளுக்கு அருகே கொண்டு வந்து விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே வர வேண்டாம். முழு ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பு, தேவைகள், தகவல்கள் மற்றும் இதர பிரச்சினைகள் தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்பினால் சேலம் மாவட்ட காவல் துறையின் உதவி மையத்தை 94981 00970, 0427 2272929 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT